நடிகை மீனாவின் கணவரின் திடீர் உயிரிழப்பு திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த நடிகை மீனா, சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் , உலக நாயகன் கமலஹாசன் உட்பட தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து ப வெற்றிப்படங்களை கொடுத்தவர்.
கடந்த 2009ஆம் ஆண்டு நடிகை மீனாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளா. இவர் விஜய் நடித்த ’தெறி’ படத்தில் அறிமுகமான நிலையில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்த நிலையில், நுரையீரல் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்றும், நுரையீரல் பிரச்சனையுடன் கொவிட் பாதிப்பும் இருந்ததால் அவரை காப்பாற்ற மருத்துவர்களால் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இவரின் உயிரிழப்பு திரையுலகை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. ஒட்டு மொத்த திரையுலகும் இரங்கல் தெரிவித்து வருகின்றது.
#CinemaNews
Leave a comment