6 77
சினிமாபொழுதுபோக்கு

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நடிகர் கார்த்தி.. சூர்யாவின் இந்த முடிவுக்கு இதுதான் காரணமா

Share

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நடிகர் கார்த்தி.. சூர்யாவின் இந்த முடிவுக்கு இதுதான் காரணமா

நடிகர் சிவகுமாரின் இரு மகன்களும் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். சூர்யா – கார்த்தி இருவருக்கும் பல லட்சம் ரசிகர்கள் இருப்பதை நாம் அறிவோம்.

நடிகர் சூர்யா சினிமாவை தாண்டி, பலரும் பல உதவிகளை செய்து வருகிறார். சில விஷயங்கள் அதில் வெளியே தெரிந்தாலும் கூட, பல விஷயங்கள் தெரியாமல் போய்விடுகிறது. அப்படி நமக்கு இதுவரை தெரியாத, சூர்யா செய்த நல்ல விஷயத்தை பிரபல பாடார் க்ரிஷ் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதில் “சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நானும் சூர்யா அண்ணனும் ஒரே காரில் சென்றோம், அப்போது தெருவில் ஒருவர் விபத்தில் தலையில் பலத்த காயத்துடன் அடிபட்டு கிடந்தார். அவரை சுற்றி மக்கள் பலரும் நின்று கொண்டு இருந்தனர். ஆனால் உதவவில்லை.

உடனடியாக காரில் இருந்து இறங்கி, அடிபட்டு கிடந்தவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் சூர்யா. அவரை காப்பாற்ற முடிந்தது. நான் இப்படியொரு உதவியை செய்திருக்க மாட்டேன், யோசிப்பேன். ஆனால், சூர்யா அண்ணா செய்தார். எப்படி அண்ணா என்று அவரிடம் நான் கேட்டேன்”.

அதற்கு சூர்யா அளித்த பதில் “அப்படி நினைத்திருந்தால் என் தம்பி இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டான்” என்றார்.

“ஆம் சூர்யாவின் அண்ணாவின் தம்பி நடிகர் கார்த்தி, கல்லூரியில் படித்த வந்தபோது, அவருக்கு விபத்து ஒன்று ஏற்பட்டது. அந்த விபத்தில் கார்த்தியின் தலையில் அடிபட்டு தெருவில் கிடந்துள்ளார். அப்போது ஒருவர், இந்த பையனை பார்க்க சிவகுமார் மகன் போல் உள்ளதே, என உடனடியாக கார்த்தியை மருத்துவமனையில் அனுமதித்து, உயிரை காப்பாற்றியுள்ளார். அதனால் தான் இன்று கார்த்தி உயிருடன் இருக்கிறார்” என அவர் கூறியுள்ளார்.

இந்த தகவலை பாடகர் க்ரிஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...