தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா, சமீபத்தில் தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.
நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் பிரிவுக்கு சில செய்தி நிறுவனங்கள் அதிர்ச்சி காரணங்களை வெளியிட்டது.
குறிப்பாக சில தெலுங்கு யூடியூப் சேனல்கள் சமந்தாவுக்கு உடை வடிவமைப்பாளர் ப்ரீத்தம் ஜுகல்கருடன் தொடர்பு என வதந்திகள் பரப்பின.
ஆனால் அதனை அவர் மறுத்தார். இருப்பினும், வதந்திகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் தன்னைப் பற்றி தவறான தகவல்கள் பகிர்ந்த சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்குகள் தொடர்ந்துள்ளார்.
#CinemaNews
Leave a comment