download 8 1 6
சினிமாபொழுதுபோக்கு

படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு!

Share

இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் ‘கேடி – தி டெவில்’. காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

கேடி -தி டெவில் 1970-களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஹீரோ துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத் இருவருக்கும் இடையிலான சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

இதில், எதிர்பாராத விதமாக, டம்மி குண்டு சற்று வீரியத்துடன் வெடித்ததில் சஞ்சய் தத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கேடி -தி டெவில் படக்குழு மேலும், சிதறிய கண்ணாடி துண்டுகள் அவரின் முகம், முழங்கை ஆகிய இடங்களில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சஞ்சய் தத், விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...

world 100
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: மும்பையில் தீவிர சிகிச்சை!

இந்திய இசையுலகின் ஜாம்பவானும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே...

Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...