பீஸ்ட் படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தளபதி 66.
இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இதேவேளை, விஜயின் தந்தையாக சரத்குமார் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், விஜய்க்கு அண்ணனாக 90களில் திரையுலகை கலக்கி வந்த பிரபலம் ஒருவர் நடிக்கவுள்ளார்.
ஆமாங்க, 90களில் வெள்ளி விழாப் படங்களை கொடுத்து வெற்றிநாயகனாக வளம் வந்தவர் நடிகர் மோகன். இவர் தளபதி 66 இல் விஜய்க்கு அண்ணனாக நடிக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
#Cinema