தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஷாலின் எனிமி, சிம்புவின் மாநாடு, அருண் விஜய்யின் வா டீல் ஆகிய 4 படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாத்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடக்கின்றன. நேற்றைய தினம் படத்தின் டீஸர் வெளியானது.
இரசிகர்களை டீசர் வெகுவாக கவர்ந்தது.
படையப்பா படத்தில் தோன்றிய ஸ்ரைலிஸ்ட் ரஜனியை மீண்டும் பார்க்க கிடைத்ததாக சமூக வலைத்தளங்களில் ரஜனி ரசிகர்கள் பதிவிட்டனர்.
இவ்வாறான நிலையில், கொவிட் பரவலைக் காரணம் காட்டி, தமிழகத்தில் திரையரங்குகளில் 50 வீத இருக்கைகளையே பயன்படுத்த முடியும் என்ற விதிமுறையுள்ளது.
இதனை நவம்பர் 1 ஆம் திகதி முதல் 100 வீதமாக அனுமதிக்க வேண்டும் என திரைப்பட சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வருவதால் 100 வீத இருக்கைக்கு அனுமதி கிடைத்தால் இரட்டிப்பு இலாபத்தை திரையரங்குகளும் சம்பாதிக்கும்.
Leave a comment