அழகுக் குறிப்புகள்ஜோதிடம்பொழுதுபோக்கு

வீட்டில் எந்த திசையில் துளசிச் செடியை வைக்க வேண்டும் தெரியுமா….

Share
20 12
Share

அநேகமான மக்கள் வீடுகளில் துளசிச் செடியை வளர்ப்பார்கள். சிலர் வாஸ்துக்காகவும் இன்னும் சிலர் வீட்டில் நேர்மறையான சக்திகள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் வளர்க்கின்றார்கள்.

இந்து மதத்தின்படி, துளசிச் செடி விலைமதிப்பற்றதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுவதுடன் வீடுகளில் வைப்பதற்கான முக்கிய காரணம், துளசிச் செடி இலட்சுமி தேவியின் அம்சமாக பார்க்கப்படுகின்றது.

இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட துளசிச் செடியை வளர்ப்பவர்கள் அதனை பொருத்தமான திசையில் வைத்தால் அவர்கள் நினைத்ததை விட பல மடங்கு நன்மை கிடைக்கும்.

துளசிச் செடி அதிர்ஷ்டமான செடியாக பார்க்கப்படுகின்றதனால் இந்தச் செடியை வீட்டில் வைப்பதால் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் துளசிச் செடியைப் பார்த்த பின் ஒரு நாளை ஆரம்பித்தால் அன்றைய நாள் அமைதியாகவும் நிம்மதியாகவும் கடந்து செல்லும் என ஒரு சிலர் நம்புகின்றனர்.

அந்த வகையில் ஒரு வீட்டில் வாஸ்து சாஸ்திரம் படி துளசிச் செடியை எந்த திசையில் வைக்கலாம் என்பது குறித்து பின்வருமாறு நோக்கலாம்.

1. வீட்டில் துளசிச் செடி வளர்க்கும் பொழுது வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் வளர்க்க வேண்டும். இவை இரண்டும் நீரின் திசை என்பதால் வீட்டிற்குள் வரும் எதிர்மறையான சக்திகள் அழிந்து விடும்.

2. துளசிச் செடியை கவனமாக வளர்க்க வேண்டும். ஏனென்றால் வீட்டில் வளர்க்கும் துளசிச் செடி காய்ந்து போகக் கூடாது. ஆகையால் வீட்டிலுள்ள பெண்கள் அதனை கவனமாக பார்த்து கொள்வார்கள். அப்படி பார்த்தும் காய்ந்து போனால் அது வீட்டிற்கு ஏதோ தீய விடயம் நடக்க போகின்றது என்பதனை குறிக்கிறது.

3. வாஸ்துப்படி, வீட்டின் தென்கிழக்கு பகுதி “நெருப்பின் திசை” எனப்படும் திசையில் துளசிச் செடி வைக்கக் கூடாது. மேலும் துளசி செடியை தரையில் நடக் கூடாது. மாறாக தொட்டியொன்றில் நடுவது சிறந்தது.

Share
Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...