2 24
சினிமாபொழுதுபோக்கு

9 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக இணையும் பிரபலங்கள் சிம்பு-நயன்தாரா.. ஆனால்?

Share

9 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக இணையும் பிரபலங்கள் சிம்பு-நயன்தாரா.. ஆனால்?

சினிமா பிரபலங்கள் காதலிப்பது, பிரிவது, திருமணம் செய்வது, விவாகரத்து பெறுவது என வழக்கமாக செய்து வருகிறார்கள்.

நாமும் அன்றாடம் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை செய்திகளில் படித்து வருகிறோம். அப்படி பிரபலங்களில் ஹிட்டான காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் சிம்பு மற்றும் நயன்தாரா.

இவர்கள் வல்லவன் படத்தில் நடித்தபோது தீவிரமாக காதலிக்க தொடங்கினர், பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்தார்கள். இவர்கள் பிரிவுக்கு பிறகு 2016ம் ஆண்டு இது நம்ம ஆளு திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்கள்.

தற்போது இவர்கள் இருவரும் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணைய உள்ளார்கள். எப்படி என்றால் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க டிராகன் திரைப்படம் தயாராகி வருகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கம இந்த படத்தில் கயாடு லோகர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற 21ம் தேதி டிராகன் படம் வெளியாகவுள்ள நிலையில் நாளை படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சிம்பு மற்றும் நயன்தாரா கலந்துகொள்கின்றனர். அதாவது இவர்கள் 9 வருடங்களுக்கு பிறகு ஒரே பிரேமில் வரப்போகிறார்கள்.

Share
தொடர்புடையது
New Project 19
சினிமாபொழுதுபோக்கு

மலேசிய சிற்றூந்து பந்தயம்: அஜித்குமார் அணியின் கார் பழுது – ஊழியர்கள் சீரமைப்பில் தீவிரம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், மோட்டார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்ற சிற்றூந்து (Car)...

w 1280h 720format jpgimgid 01ghajqz2qk5e56y9ng2razbe1imgname new project 2022 11 08t082339.710
சினிமாபொழுதுபோக்கு

ஷங்கரின் பிரம்மாண்டக் கனவு: வேள்பாரி பட்ஜெட் ரூ. 1000 கோடி? உலகத்தரத்தில் உருவாகும் என எதிர்பார்ப்பு!

இயக்குநர் ஷங்கர் தனது அடுத்தப் பிரம்மாண்டத் திரைப்படமான **’வேள்பாரி’**யை உலகத் தரத்தில், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக...

25 693c292e025df
சினிமாபொழுதுபோக்கு

பிரபல நடிகை கடத்தப்பட்டு வன்கொடுமை வழக்கு: பல்சர் சுனி உட்பட 6 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

பிரபல நடிகை ஒருவரைக் காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முதல் குற்றவாளியான...

shruthi1 1752546398
சினிமாபொழுதுபோக்கு

திருமணம் செய்தால் ரெஜிஸ்டர் ஆபீஸில் தான் செய்வேன்- ஸ்ருதி ஹாசன் தகவல் வைரல்!

முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். தற்போது 39 வயதாகும் ஸ்ருதி ஹாசன், இதுவரை...