சினிமா
அஜித்தின் அடுத்த படம் யாருடன்.. அவரது மேனேஜர் கொடுத்த விளக்கம்

அஜித்தின் அடுத்த படம் யாருடன்.. அவரது மேனேஜர் கொடுத்த விளக்கம்
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் அதை அஜித் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். அதை தொடர்ந்து அவரது குட் பேட் அக்லீ படமும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
மறுபுறம் அஜித்தின் அடுத்த படம் யாருடன் என்பது பற்றி பல வதந்திகளும் பரவி வருகிறது.
இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தற்போது இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். அவர் கூறியதாவது..
“அஜித் தற்போது கார் ரேஸில் ஈடுப்பட்டு வருகிறார். அடுத்த ஆறு மாதங்களுக்கு அதன் மீது தான் அவரது முழு கவனமும் இருக்கும். ”
“மூன்று மாதங்களுக்கு பிறகு தான் அடுத்த பட இயக்குனர் யார் என்பது உறுதியாகும். அப்போது அது பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்” என கூறி இருக்கிறார்.