சினிமா
சிம்புவின் பிறந்தநாளில் நயன்தாரா வெளியிட போகும் அறிவிப்பு! என்ன தெரியுமா

தமிழ் சினிமா உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட், டாக்சிக், Dear Students, மண்ணாங்கட்டி, ராக்காயி, Hi என பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாகி எடுத்துள்ள திரைப்படம் தான் டெஸ்ட். கிரிக்கெட் ஆட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து மாதவன், சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாளை பிப்ரவரி 3ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக கூறியுள்ளார். நாளை பிப்ரவரி 3 நடிகர் சிம்புவின் பிறந்தநாள் என்பதை அறிவோம்.
இந்த நாளில் நயன்தாரா அப்படி என்ன அறிவிப்பை வெளியிடவுள்ளார் என கேள்வி எழுந்துள்ள நிலையில், சசிகாந்த் இயக்கத்தில் தான் நடித்துள்ள டெஸ்ட் படம் பற்றிய அறிவிப்பை தான் நயன்தாரா வெளியிடவுள்ளாராம். அதாவது, டெஸ்ட் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவரவுள்ளது என்பதுதான் இந்த அறிவிப்பு என கூறப்படுகிறது.
முக்குத்தி அம்மன், O2, நெற்றிக்கண் ஆகிய படங்களை தொடர்ந்து நயன்தாராவின் டெஸ்ட் படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.