சினிமா
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எத்தனை ஆயிரம் ஸ்கிரீன்களில் வெளியாகிறது தெரியுமா?.. அடேங்கப்பா
அஜித்தின் விடாமுயற்சி தான் தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் என பலர் நடித்துள்ளனர்.
நீண்ட காலமாகவே இப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் திரையரங்குகளில் படத்தை வேறலெவலில் கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அனிருத் இசையில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள விடாமுயற்சி வரும் பிப்ரவரி 6ம் தேதி ரிலீசாக இருக்கிறது.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் டிக்கெட் புக்கிங் எல்லாம் மாஸாக நடக்கிறது. இப்படம் தமிழகத்தில் மட்டுமே 900க்கும் அதிகமான ஸ்கிரீன்களில் வெளியாக உள்ளதாம்.
உலகம் முழுவதும் எங்கெங்கு எவ்வளவு ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது என்ற விவரம் இதோ,
தமிழ்நாடு- 900+
கேரளா- 250+
கர்நாடகா- 250+
ஆந்திரா, தெலுங்கானா- 500+
மற்ற இடங்கள்- 250+
ஓவர்சீஸ்- 1500+
மொத்தம் விடாமுயற்சி திரைப்படம் 3650+ திரைகளுக்கு மேல் ஒளிபரப்பாக உள்ளதாம். வலிமை படத்திற்கு பிறகு தமிழகத்தில் அதிக திரைகளில் வெளியாகும் 2வது படம் விடாமுயற்சி தானாம்.