1 33
சினிமாபொழுதுபோக்கு

நயன்தாரா இல்லை, ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. மாஸ் அப்டேட்

Share

நயன்தாரா இல்லை, ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. மாஸ் அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை முன்னிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டார் நெல்சன்.

அதன்படி, இரண்டு நாட்களுக்கு முன் ஜெயிலர் 2 படத்தின் டீஸர் வெளியானது. இந்நிலையில், ஜெயிலர் 2 படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

அதாவது, ஜெயிலர் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

ஆனால், தற்போது நயன்தாரா ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதால் அவருக்கு பதிலாக இறுகப்பற்று படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...