கைதி 2வில் நடிக்கும் கமல், தளபதி விஜய்! லோகேஷ் கனகராஜ் சம்பவம்
லோகேஷ் கனகராஜ் – கார்த்தி கூட்டணியில் உருவாகி 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கைதி 2. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தனர்.
2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து கைதி 2 படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ் காரணமாக கைதி 2 படம் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை LCU-வில் இணைந்துள்ளனர்.
அடுத்த ஆண்டு துவங்கவுள்ள கைதி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கைதி 2 திரைப்படம் LCU-வில் இணைந்து இருப்பதன் காரணமாக கமல் இப்படத்தில் வருவார் என கூறப்படுகிறது.
அதற்கு கமல் ஓகே என கூறிவிட்டாராம். ஆனால் விஜய் இப்படத்தில் நடிக்கமாட்டார் என்கின்றனர். அதற்கு பதிலாக அவருடைய குரல் இப்படத்தில் இருக்கும் என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.