23 65112c247b17a
சினிமாபொழுதுபோக்கு

ஒருமுறை அணிந்த உடையை மீண்டும் போட மாட்டேன், ஏன் தெரியுமா?.. சினேகா

Share

ஒருமுறை அணிந்த உடையை மீண்டும் போட மாட்டேன், ஏன் தெரியுமா?.. சினேகா

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அடைமொழி உள்ளது. அப்படி நாயகிகளில் புன்னகை அரசி என்ற பெயரை கொண்டவர் நடிகை சினேகா.

விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், பிரசாந்த், தனுஷ் என பல டாப் நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் படங்கள் நடித்து இருக்கிறார்.

நாயகியாக கலக்கி வந்தவர் இப்போது பட வாய்ப்புகள் குறைய குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார்.

கடந்த 2009ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட இருவரும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு விகான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் இருக்கிறார்கள்.

நடிகை சினேகா ஒரு பழைய பேட்டியில் கூறியிருப்பதாவது, ஒருமுறை பிரபல பத்திரிக்கையில் அடிக்கடி ஒரே உடையை சினேகா போடுகிறார், அவருக்கு அணிய வேறு உடைகள் இல்லை என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.

நிறைய விமர்சனங்கள் எனது ஆடை குறித்து வந்தது, இதனாலேயே நான் போட்ட உடையை மீண்டும் அணிய மாட்டேன்.

ஒரு உடையை போட்டுவிட்டு அதை தெரிந்தவர்களுக்கு, என்னுடைய நண்பர்களுக்கு கொடுத்து விடுவேன், போட்ட டிரஸ்சை போடுவதில்லை என்று பேசி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...