சினிமாபொழுதுபோக்கு

பிரபல நடிகையால் சுந்தர் சி-க்கும் குஷ்பூவிற்கும் சண்டை

Share
24 663450d115a97
Share

பிரபல நடிகையால் சுந்தர் சி-க்கும் குஷ்பூவிற்கும் சண்டை

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. அரண்மனை, அன்பே சிவம், கலகலப்பு, அருணாச்சலம், உள்ளத்தை அள்ளித்தா என நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்திருக்கும் படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் இன்று அரண்மனை 4 திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டியில் கலந்துகொண்ட சுந்தர் சி பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்துகொண்டார். அதில் ஒன்றாக பிரபல நடிகையால் தனக்கும் தனது மனைவிக்கும் இடையே சண்டை வந்தது என கூறியுள்ளார்.

இதில் சுந்தர் சி-யின் மனைவி நடிகை குஷ்பூ தனது பிறக்கப்போகும் மகளுக்காக ‘மாளவிகா’ எனும் பெயர் சூட்ட வேண்டும் என ஆசையோடு இருந்துள்ளார். இதை தனது கணவரிடமும் கூறியுள்ளார். இந்த சமயத்தில் படத்தின் பாடல் அமைக்க இசையமைப்பாளர் தேவாவின் ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார் சுந்தர் சி.

கதாநாயகியின் பெயரில் இந்த பாடலை அமைத்துள்ளார் தேவா. ஆனால், சரியான பெயர் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் மாளவிகா என்ற பெயரை இசையமைப்பாளர் தேவாவிடம் கூறியுள்ளார். அவரும் அட இது நல்லா இருக்கே என கூறி, மாளவிகா பெயரிலேயே பாடலை அமைத்துள்ளார்.

அதன்பின், அப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான, நடிகையின் பெயரும் மாளவிகாவாக மாறிவிட்டது. இப்படத்திற்கு பின் மளவிகாவும் தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார்.

தனது மகளுக்கு வைக்க வேண்டும் என குஷ்பூ தேர்ந்தெடுத்து வைத்திருந்த பெயரை, கதாநாயகிக்கு வைத்ததால் நடிகை குஷ்பூவிற்கும் சுந்தர் சி-க்கும் சண்டை வந்ததாம். இதை நகைச்சுவையாக அந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார் இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...