சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா!!
இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையில் இதுவரை பல சூப்பர்ஹிட் பாடல்கள் வெளிவந்துள்ளன. அடுத்ததாக இவர் இசையில் உருவாகி வரும் திரைப்படம் தான் Goat.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது.
சமீபத்தில் தான் இப்படத்தில் இடம்பெற்றுள்ள whistle podu பாடல் வெளியானது. மதன் கார்த்தியின் வரிகளில், யுவன் சங்கர் ராஜாவின் இசையில், தளபதி விஜய் அவர்களின் குரலில் வெளிவந்த இப்பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இப்பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது . இந்நிலையில் யுவன் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார் . ஆனால் என்ன காரணம் என்று சரியாக தெரியவில்லை.
Comments are closed.