24 6605a2efc610c
சினிமாபொழுதுபோக்கு

சந்தானம் 10 லட்சம் கொடுத்திருந்தா.. லொள்ளு சபா சேஷு மரணம் பற்றி கொந்தளித்த நடிகர்

Share

சந்தானம் 10 லட்சம் கொடுத்திருந்தா.. லொள்ளு சபா சேஷு மரணம் பற்றி கொந்தளித்த நடிகர்

லொள்ளு சபா நிகழ்ச்சி புகழ் நடிகர் சேஷு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் சக நடிகர்கள் உதவி கேட்டனர். ஆனால் யாரும் பெரிய அளவில் உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது.

நடிகர் சேஷு கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதி சடங்கில் சந்தானம் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

சேஷுவுக்கு 10 லட்சம் ருபாய் இருந்து ஆபரேஷன் செய்திருந்தால் உயிர்பிழைத்து இருப்பார். அவர் பல பெரிய நடிகர்கள் உடன் நடித்து இருக்கிறார்.

சந்தானம் உதவி செய்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் இறந்தபிறகு வந்து மாலை போட்டு, சோகமாக பேட்டி கொடுத்து, அடக்கம் செய்யும் வரை அருகில் நின்றுவிட்டு போனால் என்ன பிரயோஜனம் என பிரபல காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் கோபமாக பேட்டி கொடுத்து இருக்கிறார்.

என்னை போன்றவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெரிய தொகை தான், ஆனால் பெரிய ஆட்கள் 10 லட்சம் கொடுத்து இருக்கலாம் என்றும் அவர் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...