சினிமாபொழுதுபோக்கு

தனக்கு பல வெற்றிகளை கொடுத்த இயக்குனரிடம் கோபப்பட்ட அஜித்

24 6605451e56ffb
Share

தனக்கு பல வெற்றிகளை கொடுத்த இயக்குனரிடம் கோபப்பட்ட அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

அஜித்தின் திரை வாழ்க்கையில் பல ஹிட் கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் சரண். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் மற்றும் அசல் என இதுவரை அஜித்தின் நான்கு படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் சரண் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று வட்டாரம். இப்படம் வெளிவந்த சமயத்தில் பெரிதளவில் ஓடவில்லை என்றாலும், தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படமாக மாறியுள்ளது.

இப்படத்தை எடுத்து முடித்தபின் அஜித்திற்கு போட்டு காட்டியுள்ளாராம் இயக்குனர் சரண். படத்தை பார்த்து முடித்தபின், இந்த கதையை என்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேனே, ஏன் என்னிடம் சொல்லவில்லை என இயக்குனர் சரணிடம் கோபப்பட்டாராம்.

ஆனால், வட்டாரம் திரைப்படத்தில் ஆர்யா போன்ற வளர்ந்து வரும் ஹீரோ நடித்தால் தான் சரியாக இருக்கும் என அஜித்திடம் கூறினாராம் சரண். இந்த தகவலை இயக்குனர் சரண் சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...