மருத்துவமனையில் முதல் மனைவிக்கு ஆபரேஷன்.. கண்டுகொள்ளாத கமல்
கமல் ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி என்பதை நாம் அறிவோம். இவர்கள் இருவரும் 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த காலகட்டத்தில் ஒரு முறை, வாணி கணபதிக்கு திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் கமல் ஹாசன்.
அதன்பின், வாணி கணபதிக்கு ஆபரேஷன் நடந்துள்ளது. அப்போது மனைவிக்கு ஆபரேஷன் என்று கூட பார்க்காமல், படப்பிடிப்பிற்காக கிளம்பி சென்றுவிட்டாராம் கமல்.
அதன்பின் போன் கால் செய்து, தனது உடல் நலம் பற்றி தனது கணவர் விசாரிப்பார் என எதிர்பார்த்துள்ளார் வாணி. ஆனால், கமல் அப்படி எதுவுமே செய்யவில்லை என்பது பெரும் ஏமாற்றது வாணிக்கு கொடுத்துள்ளதாம்.
முதல் மனைவியை கண்டுகொள்ளாமல் சென்ற கமல், அப்போது தான் நடிகை சரிகாவுடன் காதல் உருவில் இருந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், முதல் மனைவியை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் இருந்துள்ளாராம் கமல். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.