tamilnaadi 7 scaled
சினிமாபொழுதுபோக்கு

ராஷ்மிகா மந்தனா வாய்ப்பை தட்டிப்பறித்த மாளவிகா மோகனன்.. ரூ.6 கோடி சம்பளமா?

Share

ராஷ்மிகா மந்தனா வாய்ப்பை தட்டிப்பறித்த மாளவிகா மோகனன்.. ரூ.6 கோடி சம்பளமா?

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க வேண்டிய படத்தை மாளவிகா மோகனன் தட்டி பறித்ததாகவும், அவர் ஒரு கோடிக்கும் குறைவாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது புதிய படத்திற்கு 6 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் வெளியான தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரன்வீர் சிங், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் உருவான ’அனிமல்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது என்பது தெரிந்தது. இந்த படம் ஊடகங்கள் மற்றும் திரை உலக பிரபலங்களால் படுமோசமாக விமர்சனம் செய்யப்பட்டாலும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார் என்பதும் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ரூ.900 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ’அனிமல்’ படத்தின் இரண்டாம் பாகம் ’அனிமல் பார்க்’ என்ற படத்தின் படப்பிடிப்பை விரைவில் படக்குழுவினர் தொடங்க இருப்பதாகவும் முதல் பாகத்தில் நடித்த ரன்வீர் சிங் மற்றும் அனில் கபூர் இரண்டாவது பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் முதல் பாகத்தில் நடித்த ராஷ்மிகாவுக்கு பதில் மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

சமீபத்தில் மாளவிகா மோகனன் நடித்த ’தங்கலான்’ படத்தில் ஒரு கோடிக்கும் குறைவாக சம்பளம் வாங்கிய அவருக்கு தற்போது அனிமல் இரண்டாம் பாகத்திற்கு ஆறு கோடி ரூபாய் சம்பளம் பெற ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் இது திரை உலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘அனிமல்’ படத்தின் வெற்றியை வைத்து தான் ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை உயர்த்திய நிலையில் இரண்டாம் பாகத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் மலை போல நம்பி இருந்த நிலையில் திடீரென அந்த வாய்ப்புக்கு வாய்ப்பு மாளவிகா மோகனனுக்கு எப்படி சென்றது என்று அவர் புரியாமல் தனது சினிமா உலக நட்பு வட்டாரங்களில் புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனனுக்கு ‘அனிமல் 2’ படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...