சினிமாபொழுதுபோக்கு

சினிமா துறையில் இருந்து நஸ்ரியா விலக என்ன காரணம் தெரியுமா?

tamilni 329 scaled
Share

சினிமா துறையில் இருந்து நஸ்ரியா விலக என்ன காரணம் தெரியுமா?

தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் நஸ்ரியா நஷீம் . இவர் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருகின்றார் இருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம். சொல்ல போனால் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு .தனது அழகினாலும் குழந்தைத்தனத்தாலும் மக்கள் மனதை கவர்ந்தவர் .

நஸ்ரியா நஷீம் அவருடைய சினிமா வாழ்க்கையை எப்பிடி ஆரம்பித்தார், அவருடை நிஜ வாழ்க்கை வரலாறு குறித்து பார்க்கலாம் வாங்க , நஸ்ரியா நஷீம் 1994ம் ஆண்டு டிசம்பர் 20ம் திகதி கேரளா மாநிலத்தில் பிறந்தவங்க. இவங்க ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவங் . நஸ்ரியாவுக்கு ஒரு அண்ணாவும் இருக்கிறார் . இவங்க வளர்ந்தது ,படிச்சது எல்லாமே டுபாயில் தான் .

நஸ்ரியாவுக்கு சின்ன வயதிலேயே நடிப்பில மிகவும் ஆர்வம் இருந்தது. குழந்தை நட்சத்திரமாக மம்முட்டியினுடைய திரைப்படத்தில் அறிமுகமானார் . அப்பிடியே நிறைய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார் . இதனாலயே ஒழுங்கா காலேஜ் , ஸ்கூல் படிப்புகள் ஒழுங்கா முடிக்கவில்லை . அதனாலேயே இவருக்கு படிப்பு சுத்தமா வரவில்லை .

அம்மா , அப்பாவின் அனுமதியோடு நடிக்க ஆரம்பித்த இவர் எப்பிடி வேணாலும் நடிக்கலாம் , கிளமரா கூட நடிக்கலாம் என்று இல்லாமல் ஒரு படம் நடித்தாலும் ஒழுங்கா உருப்படியா நடிக்கனும் என்று நினைத்தார் . எனது திறமைக்கு ஏற்ற மாதிரி நல்ல ரோல் பண்ணனும் என்ற எண்ணத்துடன் தான் சினிமாவுக்குள்ளயே வந்தார் .

தமிழில் ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் இந்த படத்தில் பெரும் வெற்றியையும் நல்ல வரவேற்பையும் பெற்ற நஸ்ரியா இந்த படம் மூலமே பல ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார் . அதனை தொடர்ந்து தமிழில் நையாண்டி படமும் அவர் நடிப்பில் வெளியானது . இந்த திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுத்தது .

பல மலையால திரைப்படமும் நடித்து வெற்றியை ருசிபார்த்தவர் . நையாண்டி படம் மூலம் ஒரு சர்ச்சைக்குள் சிக்கினார் . அதாவது இவர் தனுஷ் உடன் ரொமேன்டிக்கா நடிக்காத ஒரு சில சீன்ஸ்ச படத்தில சேர்த்து இருக்கிறாங்க என்று தானே ஒரு கேஸ் போட்டு அந்த நெருக்கமான சீன்ஸ்ச இல்லாம ஆக்கினாங்க .

நையாண்டி படம் மூலமாக வந்த ஒரு சில பிரச்ச்னையினால் தமிழ் படங்கள் நடிக்கமா கொஞ்சம் விலகி இருந்தார் .ஐந்து திரைப்படங்களை தவிர தமிழில் வேறு திரைப்படங்கள் இன்னுமே நடிக்கவே இல்லை . தமிழ் சினிமாவை விட்டு விலகினார் நஸ்ரியா நஷீம் அவர்கள் .

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...