IMG 20231112 WA0171
சினிமாபொழுதுபோக்கு

தீபாவளி நாளில் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய விஜயகாந்தின் ஒற்றை புகைப்படம்!

Share

தீபாவளி நாளில் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய விஜயகாந்தின் ஒற்றை புகைப்படம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சினிமா மட்டுமின்றி அரசியலிலும் ஜொலித்தவர் கேப்டன் விஜயகாந்த், கேப்டன் என்றால் அவரது கம்பீரமான பேச்சே பலருக்கும் நினைவில் இருக்கும்.

முன்னணி நடிகராக வலம்வந்த விஜயகாந்த், சமூக அக்கறையுள்ள படங்களில் கவனம் செலுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

நல்ல மனிதர் என பலராலும் போற்றப்படும் விஜயகாந்த் அரசியலிலும் தனி முத்திரை பதித்தார்.

ஏழை எளிய மக்களை முதன்மையாக கொண்டே இவரது செயல்பாடுகளும் இருந்தன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியதால் அரசியல் வாழ்விலிருந்து ஓய்வெடுத்து வருகிறார்.

ஆனாலும் அவ்வப்போது விஜயகாந்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாவது வழக்கம்.

அந்தவகையில் தீபாவளி நாளான இன்று விஜயகாந்த், தன்னுடைய குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதில், உடல் மெலிந்த நிலையில் பரிதாபமான நிலையில் அமர்ந்திருக்கிறார் விஜயகாந்த்.

இவரது பார்த்த பலரும் அவருக்கு என்ன தான் ஆனது? எங்கள் கேப்டனுக்கா இப்படி? என பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
New Project 19
சினிமாபொழுதுபோக்கு

மலேசிய சிற்றூந்து பந்தயம்: அஜித்குமார் அணியின் கார் பழுது – ஊழியர்கள் சீரமைப்பில் தீவிரம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், மோட்டார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்ற சிற்றூந்து (Car)...

w 1280h 720format jpgimgid 01ghajqz2qk5e56y9ng2razbe1imgname new project 2022 11 08t082339.710
சினிமாபொழுதுபோக்கு

ஷங்கரின் பிரம்மாண்டக் கனவு: வேள்பாரி பட்ஜெட் ரூ. 1000 கோடி? உலகத்தரத்தில் உருவாகும் என எதிர்பார்ப்பு!

இயக்குநர் ஷங்கர் தனது அடுத்தப் பிரம்மாண்டத் திரைப்படமான **’வேள்பாரி’**யை உலகத் தரத்தில், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக...

25 693c292e025df
சினிமாபொழுதுபோக்கு

பிரபல நடிகை கடத்தப்பட்டு வன்கொடுமை வழக்கு: பல்சர் சுனி உட்பட 6 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

பிரபல நடிகை ஒருவரைக் காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முதல் குற்றவாளியான...

shruthi1 1752546398
சினிமாபொழுதுபோக்கு

திருமணம் செய்தால் ரெஜிஸ்டர் ஆபீஸில் தான் செய்வேன்- ஸ்ருதி ஹாசன் தகவல் வைரல்!

முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். தற்போது 39 வயதாகும் ஸ்ருதி ஹாசன், இதுவரை...