Bigg Boss season 7: மதுரை பொண்ணு.. கமல் கொடுத்த ஆசி.. – யார் இந்த மாயா?
விக்ரம், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை மாயா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார்.
நடிகை மாயா மதுரையை சேர்ந்தவர். சினிமாதான் தன்னுடைய கனவு என்று முடிவு செய்தவர் முட்டி, மோதி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அடிப்படையில் மாயா ஒரு நாடகக்கலைஞர். அது சம்பந்தமான அனைத்து வீடியோக்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கின்றன.
தொடரி, வேலைக்காரன் என பல படங்களில் நடித்தாலும், கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற விக்ரம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பட்டிதொட்டியெங்கும் சென்று சேர்ந்தார்.
நாடக கலைஞர் என்பதால், பபூன் வேடமிட்டு மருத்துவமனைகளில் பல நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார். இவரது நகைச்சுவையான நடிப்பில் சிரித்து மகிழ்ந்த நோயாளிகள், அந்த நோயில் மீள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். இது தனக்கு மிகவும் ஆத்ம திருப்தி தருவதாக சொல்கிறார்.
அவர் பேசும் போது, “ விக்ரம் திரைப்படத்தில் நடிக்கும் போது கம்ல் சார் என்னை ஆசீர்வாதம் செய்தார். இதைப்பார்த்த லோகேஷ் நீ உண்மையிலேயே லக்கி என்று சொன்னார். நீங்கள் ஆசீர்வாதம் செய்த பின்னர், எனக்கு சினிமா வாய்ப்புகள் மடியில் வந்து கொட்டுகின்றன” என்று சொல்லி இப்போதும் அதே போல தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் கமல் அதனை மறுத்து, கட்டிப்பிடித்து ஆசீர்வதித்தார்.
- bigg boss
- bigg boss 7
- bigg boss 7 promo
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil contestant
- bigg boss 7 tamil contestants
- bigg boss 7 tamil contestants list
- bigg boss 7 tamil launch date
- bigg boss 7 tamil promo
- bigg boss promo
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss season 7 tamil contestants
- bigg boss season 7 tamil promo
- bigg boss tamil
- bigg boss tamil 6
- bigg boss tamil 7
- bigg boss tamil promo
- bigg boss tamil season 7