சிவகார்த்திகேயனுக்கு அடித்த அதிஷ்டம்
நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா மற்றும் யோகி பாபு ஆகியோரது நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் மாவீரன்.சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் வெறும் 4 நாட்களிலேயே 50 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று அதிரடியாக வெளியானது.
இந்த ஆண்டு வெளியான அஜித்தின் துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியாகாத நிலையில், சிவகார்த்திகேயன் படத்துக்கு படக்குழுவினர் வெளியிட்ட வசூல் அறிக்கை சோஷியல் மீடியாவில் பெரும் தாக்கத்தை எழுப்பி உள்ளது.
விஜய்சேதுபதி வாய்ஸ் ஓவரில் சிவகார்த்திகேயன் எதிரிகளை துவம்சம் செய்யும் அந்த இடைவேளை மாஸ் ஃபைட் சீனுக்கே டிக்கெட் விலை வொர்த் என ரசிகர்கள் தொடர்ந்து மாவீரன் படத்தை பார்த்து வருகின்றனர்.
மேலும், யோகி பாபுவின் காமெடி காட்சிகள் டாக்டர் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் காம்போவில் வேறலெவலில் வொர்க்கவுட் ஆகி உள்ள நிலையில், 5ம் நாள் வசூல் அதிக பட்சமாக 55 கோடி முதல் 57 கோடி வரை உலகளவில் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வாரம் தமிழில் சிவகார்த்திகேயன் படத்தின் வசூலை நிறுத்தும் அளவுக்கு எந்தவொரு பெரிய படமும் வெளியாகவில்லை. ஹாலிவுட் படமான ஓப்பன்ஹெய்மர் மட்டுமே வெளியாகிறது.இந்நிலையில், சிவகார்த்திகேயன் இரண்டாம் வார இறுதியிலும் தியேட்டர்களை ஆக்கிரமித்து 100 கோடி வசூலை விரைவில் எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- best debut directors in tamil cinema
- cinema ticket channel in tamil
- Collection Report
- intresting facts about tamil cinema
- intresting facts about tamil cinema directors
- latest tamil movies
- maveeran movie
- mr tamilan
- samar tamil movie
- sivakarthikeyan
- sivakarthikeyans maveeran
- Tamil
- Tamil Actress
- tamil cinema
- tamil cinema (film genre)
- tamil cinema news
- tamil movie
- tamil movies
- tamil review
- tamil shorts
- tamil song
- tamil talkies
- tamil trending
- unknown facts about tamil cinema
- unknown facts about tamil cinema directors
Leave a comment