சினிமாவை விட்டு விலகிய பிரபல நடிகர்
சினிமாபொழுதுபோக்கு

திடீரென சினிமாவை விட்டு விலகிய பிரபல நடிகர்

Share

சினிமாவை விட்டு விலகிய பிரபல நடிகர்!

இந்தி சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ரஜத் பேடி. தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவர் சமீபத்தில் சினிமாவில் இருந்து விலகி விட்டார். இதற்கான காரணங்கள் குறித்து சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் ரஜத் பேடி கூறி இருக்கின்றார்.

அந்தவகையில் அவர் கூறுகையில் “ஹிருத்திக் ரோஷனின் கோயி மில் கயா இந்தி படத்தில் நான் வில்லனாக நடித்து இருந்தேன். எனது கதாபாத்திரம் கதாநாயகன் மற்றும் நாயகிக்கு இணையாக அப்படத்தில் இருந்தது. இந்த படத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டு நான் நடித்து இருந்தேன். ஆனால் படம் முடிவடைந்த பிறகு எடிட்டிங்கில் நான் நடித்த அனைத்து காட்சிகளையும் அவர்கள் நீக்கி விட்டனர்.

இது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதன்பிறகு சன்னி லியோனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு சம்பளத்தை காசோலையாக கொடுத்தனர். வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் அது திரும்பி வந்தது. இதற்காக கோர்ட்டுக்கு சென்று போராடுவது தேவையா? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்” என்றார்.

மேலும் “எனது நண்பர்கள் ரூ.2 ஆயிரம் கோடி பரிவர்த்தனை நடக்கும் பெரிய கம்பெனிகளை நடத்துகிறார்கள். நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன்? என்று எனக்கு அந்த சமயத்தில் தோன்றியது. சம்பாத்தியம் முக்கியம் என்றும் நினைத்தேன். அதனால் சினிமாவை விட்டு விலகி விட்டேன்” என பல விடயங்களை வெளிப்படையாக கூறி உள்ளார்.

எது எவ்வாறாயினும் நடிகர் ரஜத் பேடி திடீரென சினிமாவை விட்டு விலகியுள்ளமை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...