நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நடந்து வருகிறது.
கங்குவா படக்குழுவினருடன் சூர்யா -ஜோதிகா படப்பிடிப்பிற்கு இடையே தனது மனைவி ஜோதிகா மற்றும் படக்குழுவினருடன் நடிகர் சூர்யா கொடைக்கானலின் இயற்கை அழகை கண்டு ரசித்தார்.
தற்போது சுற்றுலா பயணிகள் அதிகமாக கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் அவர்கள் பார்வையில் படாதபடி அதிகாலை நேரங்களில் பிரையண்ட் பார்க் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானலுக்கு வரும் போதெல்லாம் இயற்கை அழகை கண்டு ரசிப்பது புதுவித அனுபவத்தை தருவதாகவும், எத்தனை முறை ரசித்தாலும் கண்களுக்கு சலிப்பை தராத இயற்கை காட்சிகள் இங்கு அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
#cinema
1 Comment