nayan
சினிமாபொழுதுபோக்கு

‘எது பண்ணாலும் எதாவது ஒன்னு சொல்லிட்டே இருப்பாங்க’ – மனம் திறந்த நயன்

Share

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா ‘கனெக்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

‘கனெக்ட்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இடைவேளை இல்லாமல் உருவான இப்படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடம் ஆகும். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு நிகழ்ச்சியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கனெக்ட் படத்தின் புரொமோஷனுக்காக நயன்தாரா சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில், அப்போ இல்ல இப்ப வரைக்கும் விமர்சனங்கள் வந்திட்டு இருக்கு. ஒவ்வொரு படத்துலயும் ஒன்னு சொல்றாங்க, உடல் எடை கூடிட்டா, எடைய குறைச்சிட்டா எது பண்ணாலும் எதாவது ஒன்னு சொல்லிட்டே இருப்பாங்க. எது பண்ணாலும் தப்பா ஆகிடுது. என் இயக்குனர்கள் என்கிட்ட என்ன சொல்றாங்களோ அதை நான் பூர்த்தி செய்ய முயற்சி செய்வேன் என்றார். இப்படம் நாளை டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...