sl52699007520057 e1671350693526
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

செட்டிநாடு நண்டு வறுவல்

Share

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த நண்டு – 8
இடித்த சின்ன வெங்காயம் – 1
பொடியாக நறுக்கிய தக்காளி – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

அரைக்க:

தேங்காய்த்துருவல் – 1/4 கப்
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
கரம்மசாலா – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 7.

செய்முறை

  • காய்ந்த மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து மைய அரைக்கவும்.
  • தேங்காய்த்துருவல், கசகசா, பெருஞ்சீரகம், கரம் மசாலாவை அரைத்து விழுதாக்கவும்.
  • கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து, நசுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, காய்ந்த மிளகாய் விழுது… என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
  • பின் மஞ்சள்தூள், உப்பு, நண்டு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.
  • நண்டு வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கவும்.

குறிப்பு:

நண்டு விரைந்து வெந்துவிடும் என்பதால் குறைவான நீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். எப்பொழுதும் சமைக்கும் நேரத்தில்தான் நண்டை சுத்தம் செய்யவேண்டும்.

முன்பே சுத்தம் செய்தால் சுவை மாறும். கிருமிகள் சேரும். நண்டுக்கு மிளகுக்கு பதில் மிளகாயைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் நண்டு, மிளகு இரண்டுமே சூட்டை அதிகப்படுத்தும்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...

10 4
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து...

9 4
சினிமாபொழுதுபோக்கு

38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

11 3
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது...