srk
சினிமாபொழுதுபோக்கு

ஷாருக்கானுடன் இணையும் தென்னிந்திய பிரபலங்கள்

Share

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது ‘பதான்’ மற்றும் ’ஜவான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்தப் பக்கத்தில் இரண்டு தென்னிந்திய பிரபலங்கள் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து வரும் ‘பதான்’ மற்றும் ’ஜவான்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் அடுத்த கட்டமாக அவர் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் இயக்கிய சர்க்கஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ’காந்தாரா’ படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி மற்றும் பிரபல கன்னட நடிகர் ரக்சித் ஷெட்டி ஆகிய இருவரும் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ’காந்தாரா’ திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 12
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் வைல்டு கார்டு எண்ட்ரியாக ஆயிஷா வருகிறாரா? எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்

பிக் பாஸ் ஷோவுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ஷோ ஹிந்தி, தமிழ்,...

4 12
சினிமாபொழுதுபோக்கு

54 வயதில், 17 வயது இளைய பெண்ணை திருமணம் செய்து கொண்ட விஜய் பட நடிகர்.. யார்?

சினிமா துறை பொறுத்தவரை வயது பார்த்து திருமணம் செய்து கொள்ள மாட்டனர். அந்த வகையில், 54...

3 12
சினிமாபொழுதுபோக்கு

தர்பூசணி ஸ்டாரை எட்டி உதைத்த பார்வதி.. பிக் பாஸ் 9ல் இன்று

விஜய் டிவியின் பிக் பாஸ் 9ம் சீசன் தொடங்கி நான்கு நாட்கள் மட்டுமே ஆகிறது. முதல்...

2 12
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் 9 முதல் எலிமினேஷன் இவர்தானா.. Voting-ல் அதிகம் வாக்குகள் பெறுவது யார் தெரியுமா?

விஜய் டிவியின் பிக் பாஸ் 9ம் சீசன் கடந்த ஞாயிறு அன்று தொடங்கியது. மொத்தம் 20...