சினிமா
‘வாரிசு’ படக்குழுவின் மாஸ் அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்
#VarisuSecondSingle - #TheeThalapathy 🔥
— Sri Venkateswara Creations (@SVC_official) December 2, 2022
THE BOSS is all set to arrive on Dec 4th at 4PM 💥#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana #Varisu #VarisuPongal#30YearsOfVijayism pic.twitter.com/bpZIjNRLq4
‘வாரிசு’ படத்தின் இரண்டாவது பாடலான ‘தீ தளபதி’ பாடல் வருகிற டிசம்பர் 4-ஆம் திகதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
அண்மையில், இப் படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலை கடந்த 5-ம் திகதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான ‘ரஞ்சிதமே’ பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளங்கசிலை ஆக்கிரமித்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் இரண்டாவது பாடல் தொடர்பில் அப்டேட் வெளியாகியுள்ளமை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#cinema
You must be logged in to post a comment Login