1795059 j2
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் ஹிந்தியில் ஜோ

Share

தென் இந்தியா படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜோதிகா. இவர் ஹிந்தியில் 1998-ம் ஆண்டு வெளியான ‘டோலி சஜா கே ரக்கீனா’ என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். அதன்பின் தமிழ் படங்களில் கவனம் செலுத்திய ஜோதிகா, 2001-ல் ‘லிட்டில் ஜான்’ என்ற ஹிந்தி படத்தில் மீண்டும் நடித்து இருந்தார். அதன் பிறகு ஹிந்தியில் அவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை.

தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இது ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழில் அதிபரின் வாழ்க்கை வரலாறு படம். இதில் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்க, துஷார் இத்ராணி இயக்குகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகாவை படக்குழுவினர் அணுக அவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு ஜோதிகா மீண்டும் இந்தி படத்தில் நடிக்கயிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிகா தற்போது மலையாளத்தில் தயாராகும் காதல் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...