சினிமாபொழுதுபோக்கு

பட்டையை கிளப்பும் ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’

Share

தளபதி விஜய் குரலில் அண்மையில் வெளியாகிய ‘ரஞ்சிதமே’ பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இப் படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான ‘ரஞ்சிதமே’ பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 5
பொழுதுபோக்குசினிமா

துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்திற்காக மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ்… ஏன் தெரியுமா?

பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் பைசன். மாரி செல்வராஜ்...

5 15
சினிமாபொழுதுபோக்கு

அந்த காட்சிக்காக இரவு முழுவதும் பயிற்சி செய்தேன்.. ஓப்பனாக சொன்ன மமிதா பைஜூ

மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பின் தொடர்ந்து படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை மமிதா பைஜூ....

4 15
சினிமாபொழுதுபோக்கு

நல்ல பெயர் வரலனா பரவாயில்லை, கெட்ட பெயர் வர வச்சுடாதீங்க- அஜித் வெளிப்படையான பேச்சு

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த...

3 15
சினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸ் சவுந்தர்யாவிடம் ரூ. 17 லட்சம் பணம் மோசடி.. அவரே வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் பெரிய பட்ஜெட்டில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ் 8. இந்த பிக்பாஸ் 8...