1792730 fruit ice cube massage
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

முக அழகை மேலும் மெருகூட்ட பழங்களை வைத்து ஐஸ்கட்டி மசாஜ்

Share

சரும பராமரிப்புக்கு ஐஸ்கட்டிகளைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உண்டாகும். வேலைப்பளு, அலைச்சல் போன்ற காரணங்களால் உடலும், மனமும் சோர்ந்து இருக்கும்போது ஐஸ்கட்டியை முகத்தில் மென்மையாகத் தேய்த்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

தக்காளி, உருளைக்கிழங்கு, ஆரஞ்சு, கற்றாழை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் சாறை ஐஸ் டிரேயில் நிரப்பி, கட்டியாக மாற்றியும் பயன்படுத்தலாம்.

சருமப் பொலிவு அதிகரிக்கும்

வெயில், சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால், முகத்தில் அழுக்குப் படிந்து பொலிவு குறையும். ஐஸ் கட்டியைக் கொண்டு முகத்தில் மென்மையாக மசாஜ் செய்தால், ரத்த ஓட்டம் சீராகி சருமத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்; முகம் பளபளக்கும்.

சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கும் ஐஸ் கட்டியை பயன்படுத்தலாம். பாலை, ஐஸ் டிரேயில் ஊற்றி உறைய வைத்து, அந்த ஐஸ் கட்டியை மென்மையாக முகத்தில் தேய்க்கலாம். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம், இறந்த செல்களை நீக்கி சருமத்தின் இயற்கையான பொலிவை அதிகரிக்கும்.

பேஸ் பேக், பேஸ் மாஸ்க் போன்றவற்றை முகத்தில் தடவுவதற்கு முன்பு, ஐஸ் கட்டியால் சருமத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும். இதனால் தோலின் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும். கரு வளையம் நீங்கும்:

கருவளையம் நீங்கும்

கண்களுக்குக் கீழ் உருவாகும் கருவளையம் முகத்தின் அழகைக் கெடுக்கும். ரோஜா பன்னீர், வெள்ளரிச் சாறு இரண்டையும் கலந்து ஐஸ் டிரேயில் உறைய வைக்கவும். இந்த ஐஸ் கட்டியை கண்களைச் சுற்றிலும் மென்மையாகத் தடவி வந்தால் விரைவில் கரு வளையம் நீங்கும். அதிக வேலைப்பளுவால் ஏற்படும் கண் சோர்வுக்கு இது சிறந்த நிவாரணி. ஐஸ் கட்டியை கண்களின் உள் மூலையில் இருந்து, புருவங்களை நோக்கி வட்ட வடிவ இயக்கத்தில் தடவ வேண்டும். இதனால் கண்கள் புத்துணர்ச்சி அடையும்.

முகப்பருவைக் குறைக்கும்

ஐஸ்கட்டியில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்பு, முகத்தில் வரும் பருக்களைப் போக்கும். இதைத் தொடர்ந்து தடவி வரும்போது, சருமத்தில் அதிகமான எண்ணெய் உற்பத்தி கட்டுப்படும். சருமத் துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகள் நீங்கும். தளர்ந்த சருமம் இறுக்கம் அடையும்.

சுருக்கங்கள் மறையும்

உதடுகள் மென்மையாகும்: வறட்சியால், வெடிப்பு ஏற்பட்டு உதடுகள் உலர்ந்து இருக்கும். ஐஸ் கட்டியை உதட்டின் மீது மென்மையாகத் தடவி வந்தால், சருமம் நீரேற்றம் அடைந்து மென்மையாகும்.

#beauty

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
love story 1769079434
பொழுதுபோக்குசினிமா

காதலர் தினத்தில் மீண்டும் சாய் பல்லவி – நாக சைதன்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து!

சேகர் கம்முல்லா இயக்கத்தில் வெளியாகி தெலுங்குத் திரையுலகில் பெரும் வசூல் சாதனை படைத்த ‘லவ் ஸ்டோரி’...

21 612cf3acceebc 1
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் திரையரங்குகளில் மங்காத்தா அதிரடி! அர்ஜுன் நடித்த வில்லன் பாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார்?

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தல அஜித்தின் 50-ஆவது திரைப்படமாக வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த ‘மங்காத்தா’...

7b4e0ad0 ebdc 11f0 bb6f d709b650ca8e.jpg
சினிமாபொழுதுபோக்கு

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? தணிக்கை சபை வழக்கின் இறுதித் தீர்ப்பு ஜனவரி 27-ல்!

நடிகர் விஜய் நடிப்பில், அவரது இறுதித் திரைப்படம் எனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ்...

download 3
பொழுதுபோக்குசினிமா

ஒஸ்கார் வரலாற்றில் புதிய உச்சம்: 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சின்னர்ஸ் உலக சாதனை!

இயக்குநர் ரியான் கூக்ளர் (Ryan Coogler) இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) எனும் திகில் திரைப்படம்,...