1791792 bonda
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

முட்டை போண்டா

Share

தேவையான பொருட்கள்

முட்டையை நிரப்புவதற்கு

முட்டை – 4
எண்ணெய் – 3 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
உப்பு – 1/4 தேக்கரண்டி
மிளகு – தேவைக்கு
முட்டை மஞ்சள் கரு – 1
கொத்துமல்லி தழை – சிறிதளவு

மா தயாரிக்க

கடலை மா – 1 கப்
அரிசி மா – 2 மேசைக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – 1/4 தேக்கரண்டி
தண்ணீர்

செய்முறை

* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முட்டையை வேக வைத்து கொள்ளவும். வெந்த முட்டையின் ஓடுகளை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டி வைத்து மஞ்சள் கருவையும் வெள்ளை கருவையும் தனி தனியாக எடுத்து வைக்கவும்.

* முட்டையின் வெள்ளை கருவை நிரப்ப ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்தது வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகு தூள், முட்டையின் வேகவைத்த மஞ்சள் கரு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

* தயாரான கலவையை முட்டையின் வெள்ளை கருவில் சேர்த்து வைக்கவும் * போண்டா மாவு தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு கரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

* இப்போது சூடான மற்றும் சுவையான முட்டை போண்டா தயார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 20
சினிமாபொழுதுபோக்கு

விஜய் கேட்ட கேள்வியால் நடிப்பதையே நிறுத்திய நடிகை ரோஜா… அப்படி என்ன சொன்னார்?

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு,...

4 20
சினிமாபொழுதுபோக்கு

34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா

தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவரான அமலா பாலுக்கு இன்று பிறந்தநாள். 34வது பிறந்தநாளை கொண்டாடும்...

3 20
சினிமாபொழுதுபோக்கு

வசூல் நாயகனாக மாறிய பிரதீப்.. Dude படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்..

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த...

2 20
சினிமாபொழுதுபோக்கு

நான் விவாகரத்து பெற்றபோது சிலர் கொண்டாடினார்கள்.. சமந்தா உடைத்த ஷாக்கிங் விஷயம்!

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும்...