பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்களில் ஒருவரான ஜனனி நடனத்தில் கலக்கிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தொலைக்காட்சி டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சி போலவே போட்டியாளர்கள் நடித்து காட்டி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.
தொலைக்காட்சி டாஸ்க் போட்டியாளர்களுக்கும் சரி பார்வையாளர்களுக்கும் சரி போரடிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஜனனியின் டான்ஸ் நிகழ்ச்சி அசத்தலாக இருந்ததாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த ’குரு’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு மிகவும் அழகாக ஜனனி நடனமாடினார். அவரது நடன திறமையை பார்த்து போட்டியாளர்கள் கைதட்டி அவருக்கு உற்சாகம் அளித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது . இதேவேளை, ஜனனியின் நடனத்தை அருகிலிருந்து ரொபேர்ட் மாஸ்டர் பார்த்து ரசிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இலங்கை தமிழில் கொஞ்சி பேசும் ஜனனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது அவர் ஒரு நல்ல டான்ஸர் என்பதையும் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். கண்டிப்பாக ஜனனி வெளியே வந்தவுடன் அவருக்கு திரையுலக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#cinema