skin care
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

முகத்தில் உள்ள அழுக்கை நீக்கனுமா? சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்துங்க

Share

சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக நீக்கி, உங்கள் நிறத்தை மேம்படுத்தி, உங்கள் முகத்தை பிரகாசமாகவும் பொலிவாக மாற்ற ஒரு சில இயற்கை பொருட்கள் உள்ளன.

அவற்றை ஃபேஸ் வாஷுக்குப் பதிலாக உங்கள் முகத்திற்கு பயன்படுத்தலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

skin care

  • பஞ்சுருண்டையில் பாலை நனைத்து, முகத்தைத் துடைத்து, நன்கு காய்ந்த பின், நீரில் நனைத்த சுத்தமான காட்டன் கொண்டு துடைத்தெடுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • முகத்தில் உள்ள அழுக்கை நீக்க ஒரு நாளைக்கு 2-3 முறை ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைத்தெடுங்கள். அதற்கு பஞ்சுருண்டையில் ரோஸ் வாட்டரை நனைத்து முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுக்க வேண்டும். இதைப் பயன்படுத்தினால் சோப்பு, ஃபேஸ் வாஷ் என்று எதையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
  • முகத்தில் உள்ள அழுக்கை நீக்க தேன் மற்றும் தயிரைப் பயன்படுத்தலாம். இது முகத்தில் உள்ள அழுக்கை நீக்குவதோடு, முகத்திற்கு பொலிவை தருகிறது. அதற்கு 1 டீஸ்பூன் தயிரில் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.
  • முகத்திற்கு பொலிவை தருகிறது. அதற்கு 1 டீஸ்பூன் தயிரில் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.
  • தக்காளியின் ஒரு துண்டை எடுத்து முகத்தில் சிறிது நேரம் தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இச்செயலின் மூலம் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடு இருக்கும்.
  • உருளைக்கிழங்கு துண்டு அல்லது துருவிய உருளைக்கிழங்கை எடுத்து, முகத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் ஈரமான பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.

#Beautytips #Skincare

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

1 11
செய்திகள்பொழுதுபோக்கு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி...

25 6846d907331d9
செய்திகள்பொழுதுபோக்கு

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர்: 2ஆவது முறையாக வென்றது ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டியில் ரொனால்டோ(Cristiano Ronaldo) தலைமையிலான...

4 38
செய்திகள்பொழுதுபோக்கு

மேற்கிந்திய தீவுகள் அணியை 238 ஓட்டங்களால் தோற்கடித்த இங்கிலாந்து அணி

எட்ஜ்பஸ்டனில் நேற்று இடம்பெற்ற, முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 238 ஓட்டங்கள்...