அழகுக் குறிப்புகள்
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கனுமா? சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்துங்க
சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலுமாக நீக்கி, உங்கள் நிறத்தை மேம்படுத்தி, உங்கள் முகத்தை பிரகாசமாகவும் பொலிவாக மாற்ற ஒரு சில இயற்கை பொருட்கள் உள்ளன.
அவற்றை ஃபேஸ் வாஷுக்குப் பதிலாக உங்கள் முகத்திற்கு பயன்படுத்தலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- பஞ்சுருண்டையில் பாலை நனைத்து, முகத்தைத் துடைத்து, நன்கு காய்ந்த பின், நீரில் நனைத்த சுத்தமான காட்டன் கொண்டு துடைத்தெடுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
- முகத்தில் உள்ள அழுக்கை நீக்க ஒரு நாளைக்கு 2-3 முறை ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைத்தெடுங்கள். அதற்கு பஞ்சுருண்டையில் ரோஸ் வாட்டரை நனைத்து முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுக்க வேண்டும். இதைப் பயன்படுத்தினால் சோப்பு, ஃபேஸ் வாஷ் என்று எதையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
- முகத்தில் உள்ள அழுக்கை நீக்க தேன் மற்றும் தயிரைப் பயன்படுத்தலாம். இது முகத்தில் உள்ள அழுக்கை நீக்குவதோடு, முகத்திற்கு பொலிவை தருகிறது. அதற்கு 1 டீஸ்பூன் தயிரில் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.
- முகத்திற்கு பொலிவை தருகிறது. அதற்கு 1 டீஸ்பூன் தயிரில் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.
- தக்காளியின் ஒரு துண்டை எடுத்து முகத்தில் சிறிது நேரம் தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இச்செயலின் மூலம் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடு இருக்கும்.
- உருளைக்கிழங்கு துண்டு அல்லது துருவிய உருளைக்கிழங்கை எடுத்து, முகத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் ஈரமான பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.
#Beautytips #Skincare
You must be logged in to post a comment Login