இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார்.
மேலும், இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, என்சி22 படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#venkatprabhu #nagachaitanya

                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
20 Comments