சினிமா
தனிப்பட்ட வாழ்கையை விமர்சனம் செய்ய வேண்டாம்- சிம்பு வேண்டுகோள்


கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு.
இப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இவ்விழாவின் போது சிம்பு தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது
உண்மையிலேயே லைஃப்ல நடப்பது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது.
இந்த படத்துல என்ன பாராட்டி எழுதுறாங்க. இந்த படத்துல என்னுடைய உடம்பை வச்சி உங்களால ஒன்னுமே எழுத முடியல.
எப்போமே சில பேர் என்னுடைய உடம்ப வச்சி தப்பா எழுதுவாங்க. ஒரு படத்தை விமர்சனம் பண்ணலாம் தனிநபருடைய உடம்ப வச்சி விமர்சனம் பண்ணுறது ரொம்ப தப்பு.
ரொம்ப வேண்டி கேக்குறேன் தனிப்பட்ட வாழ்கையை உடம்ப வச்சி எழுதி யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க, நன்றி” என்றார்.