சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார்.
இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
இந்நிலையில் திரைக்கதை வேலைகளை இயக்குனர் பி வாசு தொடங்க அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது.
படத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் திகதி முதல் மைசூரில் தொடங்கி நடந்துவருகிறது.
ஆனால் இதுவரை படத்தின் ஹீரோயின் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் படத்தில் லஷ்மி மேனன்தான் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#chandramukhi2 #LashmiMenon #RaghavaLawrence
Leave a comment