சினிமா
இயக்குனர் மணிரத்தினத்திற்கு கொரோனாவா?
பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு இன்று காலை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தற்போது கூறப்படுகிறது.
இதனால் மணிரத்னம் தனது வழக்கமான வேலைகளை கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலையில் கொரோனா பாஸிட்டிவ், மாலையில் கொரோனா நெகட்டிவ் என்ற மணிரத்னம் குறித்த கொரோனா செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#maniratnam #covid #coronavirus