சினிமா
மோதிரம் கொடுத்து காதலை சொன்ன அமீர்! ஏற்று கொள்வரா பாவ்னி? வைரலாகும் வீடியோ


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் பாவ்னி, அமீர் இருவரும் ஜோடியாக நடனமாடி வருகின்றனர்.
ஏற்கனவே இவர்களுடைய ஜோடிப் பொருத்தம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இருவரும் நடனத்திலும் கலக்கி வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் அமீர், பாவ்னியிடம் எத்தனையோ முறை எனது காதலை வெளிப்படுத்திவிட்டேன்.
ஆனால், நீ நோ சொல்லிட்ட இந்த முறையாவது என் காதலை ஏற்றுக்கொள் என்று மோதிரத்தை கொடுத்து தனது காதலை அனைவர் முன்பும் கூற, பாவ்னி நெகிழ்ந்து போய் கண்கலங்குகிறார்.
பாவ்னி மோதிரத்தை வாங்கினாரா? காதலை ஏற்றுக்கொண்டாரா? என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகி வைரலாகி வருகின்றது.
#Amir #Pavani