tips to stay hydrated for glowing skin
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

பளபளப்பான சருமம் வேண்டுமா? இதோ சில இயற்கை அழகு குறிப்புக்கள் !

Share

பொதுவாக சருமம் அழகாக கண்ணாடி போல பளப்பளப்பாக இருக்க வேண்டும் என எல்லோருக்கும் ஆசை இருக்கிறது.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அப்படி யாருக்கும் இருப்பதில்லை.

இதற்காக பலர் கண்ட கண்ட கண்ட கிறீம்களை வாங்கி போடுகிறார்கள். ஆனால் இது தற்காலிக தீர்வினை தான் தரும்.

இயற்கை முறையில் சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ள ஒரு சில எளிய வழிகள் உள்ளது. தற்போது அவற்றை பார்ப்போம்.

  • 5 பாதாம் பருப்பை இரவு முழுவதும் பாலில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அவற்றை தோலுரித்து இரண்டு பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இரவில், இந்த பேஸ்ட்டை லேசாக முகம், கழுத்து பகுதிகளில் தடவி, மறுநாள் காலையில் கழுவினால், சருமம் பளபளப்பாகும்.
  • கற்றாழையுடன் சிறிது கிளிசரின் கலந்து, பேஸ்ட்டை உங்கள் முகத்தில் லேசாகத் தடவவும். இதை 20 நிமிடம் கழித்து கழுவவும். இது  சருமத்தை ஒளிரச் செய்கிறது, பிக்மென்டேஷனை முழுவதுமாக நீக்குகிறது.
  • பிசைந்த வாழைப்பழத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை கலந்து, ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்கவும். கலவை மென்மையாக இருப்பதை உறுதி செய்து, உங்கள் முகத்தில் தடவவும். முழுவதுமாக காய்ந்தவுடன் கழுவி விடவும். உலர்வதற்கு சுமார் அரை மணி நேரம் ஆகும். இந்த மாஸ்க், குழந்தை போன்ற மென்மையான சருமத்தை கொடுக்கும்.
  • ஒரு தக்காளியை நசுக்கி அதில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை நன்றாக கலந்து கழுத்து மற்றும் தோலில் தடவவும். இருபது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி, பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

1 11
செய்திகள்பொழுதுபோக்கு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி...

25 6846d907331d9
செய்திகள்பொழுதுபோக்கு

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர்: 2ஆவது முறையாக வென்றது ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டியில் ரொனால்டோ(Cristiano Ronaldo) தலைமையிலான...

4 38
செய்திகள்பொழுதுபோக்கு

மேற்கிந்திய தீவுகள் அணியை 238 ஓட்டங்களால் தோற்கடித்த இங்கிலாந்து அணி

எட்ஜ்பஸ்டனில் நேற்று இடம்பெற்ற, முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 238 ஓட்டங்கள்...