நடிகர் ரன்வீர் சிங் மும்பையில் ரூ.119 கோடிக்கு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி உள்ளார்.
இந்த குடியிருப்பு மும்பை பாந்திரா பகுதியில் பேண்ட்ஸ்டான்டில் உள்ளது. அங்கு கடலை நோக்கி அமைந்திருக்கும் சாகரஷேம் என்ற சூப்பர் பிரிமீயம் குடியிருப்பின் 16, 17, 18 மற்றும் 19-வது தளங்களில் உள்ள குடியிருப்புகளை மொத்தமாக வாங்கி உள்ளார்.
இது 11 ஆயிரத்து 266 சதுர அடி கார்பெட் ஏரியாவும், 1300 அடி பிரத்தியேக மொட்டை மாடியுடனும் உள்ளது. அதோடு 19 கார்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏரியாவையும் வாங்கி உள்ளார்.
இந்த அடுக்கு மாடி குடியிருப்பை பதிவு செய்வதற்காக நடிகர் ரன்வீர் சிங் முத்திரை கட்டணமாக மட்டும் ரூ.7.13 கோடி செலுத்தியுள்ளார் என கூறப்படுகின்றது.
#CinemaNews
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
 
 
Leave a comment