இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் சீசன் 7 என்கிற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இதில் சிறப்பு விருந்தினராக நடிகை சமந்தா கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியிட்டப்பட்டுள்ளது.
அதில் திருமண வாழ்க்கை குறித்து கரண், சமந்தாவிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சமந்தா திரைப்படங்களில் நீங்கள் திருமண வாழ்க்கையை காட்டிய போது அது நன்றாக இருந்தது. ஆனால், உண்மையில் கே.ஜி.எப் போன்றுதான் திருமண வாழ்க்கை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#CinemaNews
Leave a comment