palli
பொழுதுபோக்கு

உங்கள் வீட்டில் நிறைய பல்லி இருக்கா? இதனை விரட்ட இதோ சில எளிய வழிகள்!

Share

பொதுவாக ஒருவரது வீட்டின் சுவற்றில் எப்போதும் பல்லிகள் சுற்றிக் கொண்டிருந்தால், அது வீட்டின் அழகை கெடுப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் சற்று ஆபத்தானது. இதனை முடிந்தவரை விரட்டுவது சிறந்தது.

அந்தவகையில் வீட்டில் உள்ள பல்லியை விரட்டும் சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை தெரிந்து கொள்வோம்.

  • மிளகுத் தூளை நீரில் கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, பல்லி சுற்றும் சுவற்றில் தெளித்துவிட்டால் போதும், பல்லி வராது.
  • காபி பவுடரையும், புகையிலையையும் கொண்டு உருண்டையைத் தயாரிக்க வேண்டும். இந்த உருண்டையை பல்லி அதிகம் வரும் பகுதி அல்லது வீட்டின் மூலைமுடுக்குகளில் வையுங்கள். இதனால் இனிமேல் பல்லி வராது.
  • உங்கள் வீட்டைச் சுற்றி நாப்தலீன் உருண்டைகளை ஆங்காங்கு வையுங்கள். பல்லிகளுக்கு இந்த உருண்டைகளின் கடுமையான வாசனை பிடிக்காது. எனவே இதை வீட்டு முலைகளில் வைத்தால், அதன் வாசனைக்கு பல்லி வராது.
  • உங்கள் வீட்டில் பல்லி அதிகம் சுற்றினால், ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் நீரை அப்பகுதிகளில் தெளியுங்கள்.
  • மயில் இறகை பல்லி வரும் இடத்தில் வையுங்கள். இதனால் பல்லி மயில் இறகைக் கண்டு அஞ்சி, இனிமேல் வராதாம்.
  • உங்கள் வீட்டில் பல்லிகள் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டால், ஆங்காங்கு மூலைகளில் முட்டை ஓட்டை வையுங்கள்.
  • வீட்டில் பல்லிகள் அதிகம் இருந்தால், வெங்காயத் துண்டுகளை வீட்டில் ஆங்காங்கு வெட்டி வையுங்கள் அல்லது வெங்காய சாற்றினை நீரில் கலந்து, அந்நீரை ஸ்ப்ரே செய்யுங்கள்.
  • பூண்டு பற்களை வீட்டின் மூலைகளில் வையுங்கள் அல்லது பூண்டு சாற்றினை நீரில் கலந்து அந்நீரை பல்லி வரும் இடங்களில் தெளித்துவிடுங்கள்.

 #lizard  #home #Lifestyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

1 11
செய்திகள்பொழுதுபோக்கு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி...

25 6846d907331d9
செய்திகள்பொழுதுபோக்கு

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர்: 2ஆவது முறையாக வென்றது ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டியில் ரொனால்டோ(Cristiano Ronaldo) தலைமையிலான...

4 38
செய்திகள்பொழுதுபோக்கு

மேற்கிந்திய தீவுகள் அணியை 238 ஓட்டங்களால் தோற்கடித்த இங்கிலாந்து அணி

எட்ஜ்பஸ்டனில் நேற்று இடம்பெற்ற, முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 238 ஓட்டங்கள்...