download 2 2 1 1
சினிமாபொழுதுபோக்கு

கிரிகெட் போட்டியில் கவனத்தை ஈர்த்த கெளதம் மேனனின் மகன்!

Share

தமிழ் சினிமாவில் பல காதல் வெற்றிப்படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் வாசுதேவ் மேனனின் 19 வயது மகனான ஆர்யா யோஹன் மேனன், தமிழகத்தில் நடைபெற்ற கிரிகெட் போட்டி ஒன்றில் கலந்து பலரது கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் டி.என்.பி.எல். (TNPL) நடைபெற்று வருகிறது.

2022 டி.என்.பி.எல். தொடர் கடந்த 23-ம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் நெல்லை அணியின் வெற்றிக்கு இயக்குநர் கௌதம் மேனனின் மகன் ஆர்யா யோஹன் மேனன் முக்கிய காரணமாக இருந்தார்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஆர்யா யோஹன் பவர்ப்ளேவில் மிகவும் அட்டகாசமாக பந்துவீசினார். பவர் ப்ளேவில் மட்டும் 2 ஓவர்கள் வீசி 15 ரன்களே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார்.

ஆர்யா யோஹன் லைன் மற்றும் லென்த்தில் மிகவும் அற்புதமாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி அளித்தார்.

ஆர்யா யோஹன் மேனன் மொத்தம் 3 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். மேலும், ஒரு ரன் அவுட்டும் செய்தார். இந்த போட்டியில் நெல்லை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் கௌதம் மேனனின் மகன் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கியுள்ளது சினிமா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MV5BYTI4YWEyYjQtZDg0Ni00NWE0LWFkMzUtZWY2N2MzN2UxOGVmXkEyXkFqcGc@. V1
சினிமாபொழுதுபோக்கு

பிரபுசாலமன் இயக்கத்தில் மதியழகன் நடித்துள்ள ‘கும்கி 2’ படம் எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி வெளியாகிறது.

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012ம்...

11 17
சினிமாபொழுதுபோக்கு

நிச்சயதார்த்த செய்தி உண்மை தானா.. ராஷ்மிகா மறைமுகமாக கொடுத்த பதில்

நடிகை ராஷ்மிகா மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம்....

10 18
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் டிஆர்பி இவ்வளவு தானா.. அதள பாதாளத்தில் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்திய அளவில் பிரபலமான ஒன்று. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பலவேறு சர்ச்சைகளும்...

9 17
சினிமாபொழுதுபோக்கு

Dude படத்தில் நடிக்க ஹீரோ பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

லவ் டுடே என்கிற படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தந்தவர் பிரதீப் ரங்கநாதன். இந்த வெற்றி...