udanpirappe
பொழுதுபோக்குசினிமா

ஓடிடி தளத்தில் வெளிவரும் சூர்யா படம்

Share

நடிகர் சூர்யா நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் மூலம் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

இப்படத்தை அடுத்து ஜோதிகாவின் 50 வது படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் அக்டோபர் 14 ஆம் திகதி  ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

உடன் பிறப்பே திரைப்படத்தில் சசிகுமார், ஜோதிகா, சூரி, சமுத்திரகனி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கத்துக்குட்டி படத்தை இயக்கிய இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
124759403
பொழுதுபோக்குசினிமா

இசையமைப்பாளர் தேவாவின் தம்பி சபேஷ் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும், இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. சென்னை,...

44036824 9
பொழுதுபோக்குசினிமா

“டிரோல்களால் மலையாளப் படங்களில் நடிக்கப் பயந்தேன்”: நடிகை அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர்...

124750333
பொழுதுபோக்குசினிமா

மாரி செல்வராஜ் – துருவ் விக்ரமின் ‘பைசன்’ திரைப்படம்: 6 நாட்களில் ரூ. 40 கோடி வசூல் சாதனை!

‘பரியேறும் பெருமாள்’, ‘மாமன்னன்’, ‘கர்ணன்’ போன்ற படங்களை இயக்கி மக்களின் கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் மாரி...

MixCollage 22 Oct 2025 09 19 AM 8391
பொழுதுபோக்குசினிமா

ஓராண்டுக்குப் பிறகு மகளின் முகத்தை வெளிப்படுத்திய தீபிகா – ரன்வீர் ஜோடி

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கைக் காதலித்து...