24 66bcc9663bc83
சினிமாபொழுதுபோக்கு

ஸ்ரீதேவி மரணம் குறித்துப் பேசிய ஜான்வி கபூர்: அந்த வலி அளவிட முடியாதது, மீம்ஸ் உருவாக்குவது வேதனையானது!

Share

இந்திய சினிமா கொண்டாடிய பிரபல நாயகிகளில் ஒருவரும், தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாதவருமான நடிகை ஸ்ரீதேவி அவர்களின் மரணம் குறித்து, அவரது மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் (Janhvi Kapoor) மனம் திறந்து பேசியுள்ள விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்காகச் சென்றிருந்த ஸ்ரீதேவி அங்கு உயிரிழந்தார். தற்போது அவரது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளனர்.

தாய் ஸ்ரீதேவியின் மரணம் குறித்துப் பேசிய ஜான்வி “என் தாயின் மரணம் குறித்துப் பேசி நான் விளம்பரம் பெற முயற்சிக்கிறேன் என்று மக்கள் நினைப்பார்கள் என்ற பயத்தில் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச நான் பலமுறை தயங்கி இருக்கிறேன்.

அந்த நேரத்தில் நான் அனுபவித்த வலி அளவிட முடியாதவை. அவற்றை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தர்மேந்திரா இறந்தபோது கூட, பலர் பல வகையான செய்திகளை உருவாக்கினர். ஒருவரின் மரணத்தை மீம்ஸாக மாற்றுவது மிகவும் பரிதாபமான ஒன்று. இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமாகச் சென்று கொண்டிருக்கிறது,” என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஜான்வி கபூர் தனது தாயின் மரணத்துக்குப் பின் தான் அனுபவித்த தனிப்பட்ட வேதனையையும், சமூக ஊடகங்களில் இறப்பைக் கூட இழிவுபடுத்தும் கலாச்சாரத்தையும் இந்தப் பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...