தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் டி. ராஜேந்ரர் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறையில் அறிமுகமாகி தன் சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
சில காலமாகவே சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இந்நிலையில், விரைவில் சிம்புவின் திருமணம் நடைபெறும் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,
“என் மகனுக்கு பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதை விட என் மனைவி தேர்ந்தெடுப்பதை விட இறைவன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் என்னை பார்த்தாலும் எப்போது என் மகனுக்கு திருமணம் என்று கேட்கிறார்கள். கடவுளின் அருளால் விரைவில் சிம்புவின் திருமணம் நடைபெறும்” என்று கூறினார்.
#cinema
Leave a comment